திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டுவந்த சுரேஷ் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த ஒன்றாம் தேதி நள்ளிரவு மர்மநபர்கள் முகமூடி அணிந்து கொள்ளை அடித்த சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளைபோனது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, மணிகண்டன் என்பவர் நகைகளுடன் சிக்கினார். அப்போது, அவருடன் இருந்த சுரேஷ் என்பவர் தப்பியோடினார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இதனிடையே செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சுரேஷ் இன்று சரண் அடைந்தார்.
லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகன் என்பவர் முக்கிய குற்றவாளி என போலீசார் கூறிவருகின்றனர். அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில், முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
0 Comments