தமிழக சட்டசபையின் புதிய அமைச்சரவையின் பட்டியல்

தமிழக சட்டசபையின் புதிய அமைச்சரவையின் பட்டியல்

in News / National

முதல்வர் ஸ்டாலின், பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய துறைகளை ஏற்கிறார்.

துரை முருகன் - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

கே.என். நேரு - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்.

இ. பெரியசாமி - கூட்டுறவுத்துறை

பொன்முடி -  உயர்கல்வித் துறை, தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்.

எ.வ. வேலு - பொதுப் பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.
 
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள்,  பேரிடர் மேலாண்மை.
 
தங்கம் தென்னரசு - தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள்.

எஸ். இரகுபதி - சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்.

சு. முத்துசாமி - வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகரத்திட்டமிடல், நகர் பகுதி வளர்ச்சி,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.

கே.ஆர். பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்.

தா.மோ. அன்பரசன் - ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்.

மு.பெ. சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.
 
பி.கீதா ஜீவன் - சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை.

அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை.

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத்துறை.

கா.ராமச்சந்திரன் - வனத்துறை.

சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை.

வி.செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.

ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

மா.சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.

பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை.

எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.

பி.கே.சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையதுறை.

பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை.

சா.மு.நாசர் - பால்வளத்துறை.

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித்துறை.

சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை.

சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை.

த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை.

மா.மதிவேந்தன் - சுற்றுலாத்துறை.

என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை

மனோ தங்கராஜ் - தொழில்நுட்ப துறை

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top