லாரியை வழிமறித்து கத்தியை காட்டி பணம் பறித்த கும்பலில் ஒருவர் கைது!

லாரியை வழிமறித்து கத்தியை காட்டி பணம் பறித்த கும்பலில் ஒருவர் கைது!

in News / National

கோவையில், நள்ளிரவு நேரங்களில் லாரியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பலில் ஒருவரை காவல்துறையினர் போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து - பாலக்காடு நோக்கி மீன் லோடு ஏற்றி வந்த லாரியை ஆந்திராவை சேர்ந்த சீனிவாசராவ் (44) என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் மற்றொரு டிரைவர் நாகபாபு , லோடுமேன்கள் சாஜன், நாகராஜ் ஆகியோர் இருந்தனர். நேற்று முன் தினம் நள்ளிரவு வேலந்தாவளம் அருகே லாரி சென்று கொண்டிருந்தது, அப்போது லாரியை பின் தொடர்ந்து ஒரு சொகுசு கார் ஒன்று வந்தது. வேலந்தாவளம் சர்வீஸ் ரோட்டில் செல்லும் போது பின் தொடர்ந்து வந்த கார், லாரியின் முன்னே வந்து வழிமறித்து நின்றது. காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி டிரைவர் சீனிவாசராவிடம் பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவரிடமிருந்த ரூ. 5 ஆயிரம் பணம் மற்றும் செல்போன்களை பறித்து கொண்டனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த க.க. சாவடி போலீசார் பழனிசாமி மற்றும் ஆயுதப்படை போலீசாரை பார்த்த அக்கும்பல் தப்பி ஓட முயன்றது. இதை கவனித்த டிரைவர், லோடுமேன்கள் மற்றும் போலீசார் அக்கும்பலை பிடிக்க முயன்றனர். அதற்குள் 3 பேர் காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பித்து விட்டனர். இதில் ஒருவர் போலீசாரிடம் சிக்கி கொண்டார். விசாரணையில் அவர் பாலக்காடு பள்ளிபுரத்தை சேர்ந்த சவுகத் அலியின் மகன் அனஸ்பாபு (29) என்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து பாலக்காடு பொட்டக்காலதடை சேர்ந்த மீன்வியபாரி ஹரிதாஸ் கொடுத்த புகார் அடிப்படையில் க.க. சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய பாலக்காட்டை சேர்ந்த சுதீஸ், நிஷாத், மனோஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டவ்ர்கள் மீது ஏற்கனவே வழிபறி, கொள்ளை போன்ற நிறைய வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top