குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசாமி கைது!

குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசாமி கைது!

in News / National

குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கதிரி பகுதியைச் சேர்ந்தவர் மல்லேஷ். இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். எல்லை மீறிய குடிபழக்கம் கொண்ட இவர், வழக்கம் போல் குடித்துவிட்டு அவரது நண்பருடன் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், அவரது நண்பருக்கு பணிவிடை செய்யுமாறு தனது மனைவியிடம் மல்லேஷ் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி வீட்டிற்கு காசு கொடுக்காமல் குடித்து வந்து ரகளை செய்த கணவரை தட்டி கேட்டுள்ளார்.

நண்பர் முன்பு தன்னை அவமானபடுத்தியதாக எண்ணிய மல்லேஷ், மனைவியை அடித்து கொடுமைபடுத்தியதோடு, அவரது கை கால்களை கயிற்றால் கட்டி நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பெண் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், அவரது கணவர் மற்றும் உடன் வந்த நண்பரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே மல்லேஷ் 10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 14 வருடம் சிறைச்சாலையிலிருந்து தண்டனை முடிந்து வந்தவர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top