மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இரு சக்கரம் வாங்கும் நோக்கோடு ஹோண்டா ஷோரூமுக்கு சென்றுள்ளார். கைகளில் சிறு சிறு பைகளுடன் வந்த அந்த நபர் ஹோண்டா ஆக்டிவாவை வாங்க விரும்பியுள்ளார். அந்தத் வண்டிக்கான பணம் 83,000 ஆயிரம் ரூபாயையும் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் தன்னிடம் உள்ள பணத்தை எண்ணுவதற்கு சிறுது நேரம் பிடிக்கும் என அந்த நபர் கூறியுள்ளார். பின்னர் அவரிடம் இருந்த பணப் பைகளை வாங்கிய ஷோரூம் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் . அவர் கொண்டுவந்த பைகளில் இருந்தது அனைத்தும் 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள்..
பின்னர் அவரது நேர்மறையான எண்ணத்தை புரிந்து கொண்ட ஷோரூம் பணியாளர்கள் சுமார் நான்கு மணிநேரம் செலவு செய்து அந்த நாணயங்களை எண்ணி முடித்துள்ளனர். பின்னர், பணம் சரியாக இருந்த காரணத்தினால் அந்த நபரின் கனவு பைக் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 Comments