குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் நிர்வாணமாக போலீஸிடம் ஒப்படைப்பு!

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் நிர்வாணமாக போலீஸிடம் ஒப்படைப்பு!

in News / National

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் நிர்வாணமாக தெருக்களில் நடக்கவிட்டு தண்டனை கொடுத்த சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.

நாக்பூரில் வங்கியின் தினசரி பண வசூல் முகவராக பணிபுரிந்து வரும் வைத்யா (36) என்பவர், நேற்று மாலை தினமும் பணம் வசூல் செய்யும் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் நான்கு வயது பெண் குழந்தை தனியாக இருந்ததை கண்ட வைத்யா, அக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

அந்த குழந்தையின் தாய் திடீரென வீடு திரும்பிய போது, வைத்யாவின் செயலைக்கண்டு அதிர்ச்சி அடைந்து, கூச்சல் இட்டார். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் இந்த சம்பவம் ஊர்முழுக்க வேகமாக பரவியது , உடனடியாக, அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் குவிந்து, வைத்யாவை நிர்வாணமாக தெருக்களில் நடக்கவிட்டு தண்டனை கொடுத்து, பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, வைத்யா கைது செய்யப்பட்டு, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

குழந்தையிடம் தப்பாக நடக்கமுயன்றவருக்கு நிர்வாணமாக நடக்க வைத்து பொதுமக்கள் கொடுத்த தண்டனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top