மோர் குடிப்பதற்க தனது மனைவி ஆசையாக கொடுக்கவே, அதை வாங்கி குடித்த புதுமாப்பிள்ளை அந்த இடத்தியிலே சுருண்டு மயங்கி விழுந்தார்
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் லிங்கமையா. இவருக்கு மதனந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த நாகமணி என்ற பெண்ணுடன் 9 நாளைக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
9-வது நாளில் நாகமணியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்ல, லிங்கமையா மதனந்தபுரம் வந்தார். கணவன் வீட்டுக்கு வரவும், நாகமணி ஓடிப்போய் மோர் கலந்து கொண்டு வந்து குடிக்க சொன்னார்.
புது பொண்டாட்டி ஆசையாக தரவும், அதை சிறிதும் யோசிக்காமல் வாங்கி குடித்தார் லிங்கமையா.. ஆனால் மோர் குடித்த அடுத்த சில நிமிஷத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினரின் மாப்பிள்ளையை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினர். அங்கு இப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதை பற்றி லிங்கமையா குடும்பத்தினரிடமும் விசாரித்தனர். "நாகமணிக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை போல தெரிகிறது.. ஒருவேளை அவங்க வீட்டில் கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிருப்பாங்களோ என்று சந்தேகமாக இருக்கு" என்று தெரிவித்துள்ளனர்.
மோரை லிங்கமையா குடிக்கும்போதே அதிலிருந்து ஒருவித வாடை வந்திருக்கிறது.. மோர் புளிச்சிருக்கும், அதனாலதான் வாடை வருகிறது என்று நினைத்து லிங்கமையா குடித்திருக்கிறார். உண்மையில் மோரில் விஷம் கலந்ததா என உறுதியாக தெரியவில்லை.
அதேபோல, நாகமணிதான் மோரில் விஷம் கலந்திருப்பாரா, அல்லது அவருக்கே தெரியாமல் இது நடந்ததா என்றும் தெரியவில்லை.. எதுவானாலும் முழு விசாரணைக்கு பிறகுதான் உண்மைத்தன்மை வெளியே வரும் என்கிறார்கள்.
0 Comments