குஜராத்தில் வீட்டின் அருகே சிறுநீர் கழிக்க சென்ற நபரை அடித்து கொன்ற சிங்கம்!

குஜராத்தில் வீட்டின் அருகே சிறுநீர் கழிக்க சென்ற நபரை அடித்து கொன்ற சிங்கம்!

in News / National

குஜராத்திலுள்ள கிர் காடுகள் ஆசிய சிங்கங்களின் புகலிட பகுதியாக உள்ளன. ஏறக்குறைய 1,412 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் அமைந்துள்ள இங்கு சிறுத்தை புலிகள், சிங்கங்கள் உள்ளிட்டவை வசித்து வருகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, குஜராத்தின் ஜுனாகட், கிர்-சோம்நாத், அம்ரேலி மற்றும் பவ்நகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வன பகுதிகளில் 109 ஆண் சிங்கங்கள், 201 பெண் சிங்கங்கள், 73 இளஞ்சிங்கங்கள் மற்றும் 140 சிங்க குட்டிகள் என மொத்தம் 523 சிங்கங்கள் இருந்தன.

இந்த நிலையில், அங்கு கடந்த வருடம் அக்டோபரில் தல்கனியா சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 23 சிங்கங்கள் திடீரென உயிரிழந்தன. சிங்கங்கள் இடையேயான மோதல் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு ஆகியவை இந்த திட்ட்ர் உயிரிழப்புக்கு முக்கிய காரணங்களாக முதலில் கூறப்பட்டன.

இந்நிலையில், அவற்றின் 80 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வைரஸ் அறிவியல் அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வெளியிட்ட அறிக்கையில், சி.டி.வி. எனப்படும் டிஸ்டம்பர் வைரஸ் நோய் தாக்குதலுக்கு சிங்கங்கள் ஆளாகி இருந்தது தெரிய வந்தது.

சிங்கங்கள் அவ்வப்பொழுது சாலையில் உலா போவதும் உண்டு. இந்த நிலையில், குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் தல்கனியா சரகத்திற்கு உட்பட்ட வன பகுதியை ஒட்டிய ஜீரா கிராமத்தில் கடுபாய் பிலாத் (வயது 55) என்பவர் வசித்து வந்தார்..

அவர் இன்று காலை தனது வீட்டின் அருகே சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். 3 முதல் 5 வயதுடைய ஆண் சிங்கம் ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்தது. இதில் நிலைகுலைந்து போன அவர் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்து விட்டார்.

அவரது உடலை கைப்பற்றி, வன பாதுகாப்பு தலைவர் துஷ்யந்த் வசாவடா பிரேத பரிசோதனைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இது அந்த கிராம மக்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top