குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த பல இடங்களில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள பந்தர் பகுதியில் வசித்து வந்தவர் ஜலீல் (42). இவருக்கு ஷிஃபானி என்ற 14 வயது மகளும் சபில் என்ற 10 வயது மகனும் உள்ளனர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி சென்ற தனது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துவந்தார்.
வீட்டின் வாசலுக்கே வந்துவிட்ட ஜலீலை காவல்துறையினர் துப்பாக்கியில் சுட்டனர். இதனால் அவர் வீட்டின் வாசலிலேயே தன பிள்ளைகளின் கண் முன்னரே துடிதுடித்து சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். என் அப்பாவை என் கண் முன்னே போலீஸ்காரர்கள் சுட்டுக்கொன்றுவிட்டனர் என ஜலீலின் மகள் ஷஃபினா அழுதபடி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். போராட்டத்தில்கூட கலந்துகொள்ளாத அவரை போலீஸ் சுட்டுக்கொன்று ஒரு குடும்பத்தையே தெருவில் நிறுத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
0 Comments