கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை பிடிக்கும் போது வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்!

கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை பிடிக்கும் போது வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்!

in News / National

கேரளாவில் வனத்துறை ஊழியர் ஒருவர் கிணற்றுக்குள் கயிறு மூலமாக இறங்கி, துணிச்சலாக மலைப்பாம்பை மீட்க முயற்சிக்கும் வீடியோ பார்ப்பவர்களை பதபதக்கச் செய்கிறது.

கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பெராமங்கலம் என்ற பகுதியில் கிணற்றுக்குள் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற வனத்துறையினர் அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சாகில் என்ற வனத்துறை ஊழியர், கிணற்றுக்குள் கயிறு மூலமாக தைரியமாக இறங்கி பாம்பை மீட்க முயற்சித்தார்.

மிகவும் கடினமாக முயற்சியில் பாம்பைப் பிடித்த அவர் மேலே ஏற முயற்சித்தார். ஆனால், பாம்பு அவரின் உடலை சுற்றி வளைக்கத் தொடங்கியது. எனினும், விடாமல் ஒரு கையில் பாம்பை பிடித்துக்கொண்டு, மறுகையால் கயிறைப் பிடித்து அவர் மேலே ஏறினார்.ஆனால், அவரது போராட்டம் பலன் அளிக்கவில்லை. கிணற்றின் மேலே சிறிது தூரத்தில் இருந்தபோது கயிறு அறுந்து மீண்டும் கிணற்றுக்குள் விழுந்தார். பின்னர் வனத்துறையினர் சாகில் மற்றும் பாம்பினை மீட்டுள்ளனர். பதபதவைக்கும் இந்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.சாகில் மலைப்பாம்பை பிடிக்க முயற்சிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top