டெல்லியில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டீ கடை உரிமையாளர் போக்ஸோ சட்டத்தில் கைது!!

டெல்லியில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டீ கடை உரிமையாளர் போக்ஸோ சட்டத்தில் கைது!!

in News / National

டெல்லியில், 7 வயது சிறுமியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியுள்ள டீ கடை உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பெண் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவது தொடர்ச்சியாகிவிட்டது. இந்த வரிசையில் டெல்லியின் ஆதர்ஷ் நகரில் வசிக்கும் 7 வயதுசிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியுள்ளார் அதே பகுதியை சேர்ந்த ஓர் டீ கடை உரிமையாளர்.

வகுப்பு முடிந்து வீடு திரும்பிகொண்டிருந்த பெண் சிறுமியை உணவு அளிப்பதாக கூறி, தனது டீ கடைக்கு பின்னர் உள்ள ஓர் தனி அறையில் வைத்து இதை செய்திருக்கும் அந்த முதலாளி, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூற கூடாது என்றும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் நடந்த சம்பவத்தை தன் தாயிடம் கூறிய அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை தொடர்ந்து, அவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது நிரூபனமாகியுள்ளது.

இதை தொடர்ந்து அந்த சிறுமியின் தாயார் அளித்துள்ள புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டிருந்த ஆதர்ஷ் நகர் போலிசார் அந்த கடை உரிமையாளரை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமான போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குபதிவு செய்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top