பிகார் மாநில முஸாபர்பூர் நகரில், உணவு வழங்க சென்ற பெண்ணை தொடர்ந்து, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதோடு, கற்பமாக்கி விட்டு தலைமறைவான மௌலானா மீது வழக்குபதிவு செய்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் காவல் துறையினர்.
உணவு வழங்குவதற்காக மசூதிக்கு சென்று வரும் 17 வயது பெண்ணை, போதை மருந்து கொடுத்து, தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதோடு, அதனை வீடியோவிலும் பதிவு செய்துள்ளார் அந்த மசூதியின் மௌலானா. இதை பற்றி யாரிடமேனும் இதை பற்றி கூறினால் வீடியோவை இன்டர்நெட்டில் போட்டு விடுவதாக மிரட்டியும் உள்ளார்.
இதற்கு பயந்து வெகு நாட்களாக வாய்திறக்காமல் இருந்த அந்த பெண், ஒரு நேரத்தில் அப்பகுதியின் பஞ்சாயித்தில் இது குறித்த புகாரை முன்வைத்துள்ளார். எனினும், இந்த ஏழை பெண்ணின் புகாரை ஏற்க மறுத்த பஞ்சாயத்து தலைவர்கள், குழந்தையை ரூ.20,000 திற்கு விற்று விடுமாறும் அந்த பணத்தை இழப்பீடாக வைத்து கொள்ளுமாறும் மனசாட்சியின்றி கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து, கடந்த ஜீலை மாதம் முஸாபர்பூர் நகர காவல் நிலையத்தில் இது குறித்த புகாரை முன் வைத்துள்ளார் அந்த பெண். மசூதியின் மௌலானா மீது புகார் அளித்துள்ளதோடு, இந்த வீடியோ பற்றி எப்படியோ தெரிந்துகொண்டு, அதை வைத்து தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக அப்பகுதியன் எலக்ட்ரிஷியன் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார் அந்த பெண்.
இந்த பெண் அளித்துள்ள புகாரின் பேரில், இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் அப்பகுதி போலிசார், புகாரை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள இருவரையும் தேடும் பணியிலும் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
0 Comments