மகாராஷ்டிராவில், திருமணமான மறுநாளே தனது 19 வயது காதலியை கத்தியால் பலமுறை சரமாரியாக குத்திய காதலன் கைது செய்யப்பட்டான்.
மகாராஷ்டிரா மாநிலம் தாணே மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் காதே (19), அத்பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு அப்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறொரு நபருடன் அந்த பெண்ணிற்கு திருமணம் செய்துவைத்தனர்.
இதனால், மிகவும் ஆத்திரமடைந்த விஷால், தனது காதலியான அந்த பெண்ணை தனியாக சந்திக்க விரும்பம் தெரிவித்தார். அதன்படி திருமணத்திற்கு அடுத்த நாள் அப்பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறை ஒன்றில் இருவரும் சந்தித்தனர். ஆப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த விஷால், தான் கொண்டுவந்திருந்த கத்தியை எடுத்து அப்பெண்ணை குத்தினார். இதில் படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பெண்ணை தாக்கிய காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
0 Comments