ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து இதர தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் அனைத்திற்கும் இனி நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த கட்டணத்திற்கு இணையாக டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று ஜியோ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும், ‘ஜியோவில் இருந்து மற்றொரு ஜியோ எண்ணிற்கோ, லான்ட்லைனிற்கோ போன் செய்தால் கட்டணம் எதுவும் கிடையாது. அதேபோல வாட்ஸ் அப் உள்ளிட்டவைகளில் செய்யப்படும் கால்களுக்கு கட்டணம் கிடையாது. வழக்கம்போல மற்ற நெட்வொர்க்கில் இருந்து வரும் கால்கள் இலவசம் தான் ‘என்று குறிப்பிட்டுள்ளது.
6 பைசா கட்டணம் வசூல் தொடர்பாக நான்கு டாப்-அப் வவுச்சர்களை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. ரூ. 10 மற்றும் ரூ. 100 வரையில் டாப்-அப் வவுச்சர்கள் இருக்கும்.மேலும், போஸ்ட்பெய்ட் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments