தெலுங்கானாவை போல், பீகாரிலும் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் உள்ள குகுடா என்ற கிராமத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடலை எரிந்த நிலையில் போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த இளம்பெண் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு, முகத்தின் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்துள்ளது என தெரியவந்துள்ளது. கொல்லப்படுவதற்கு முன் அப்பெண் மர்மகும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், இதேபோன்று பீகாரில் நடந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments