ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஜூன் மாதம் முதல் அமல்!

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஜூன் மாதம் முதல் அமல்!

in News / National

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் அமலாக்கப்படவுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலாக்க பட உள்ளதாக . தங்களின் வேலைக்காக இடம்பெயர்ந்து செல்பவர், வேலைக்காக அடிக்கடி தாங்கள் இடத்தை மாற்றிக்கொள்ளும் ஊழியர்கள் பயனடைவார்கள்’ என்றார்.

மேலும், இந்த திட்டம் அமலான பிறகு நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top