உடல் நலக்குறைவால் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!

உடல் நலக்குறைவால் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!

in News / National

உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாரின் அடிப்படையில், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 18ஆம் தேதியன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் ப.சிதம்பரத்தின் பெயர் 4ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சிதம்பரத்தின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வந்ததையடுத்து, தனக்கு ஜாமின்கிடைக்க சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாட்டை விட்டு செல்லக் கூடாது. விசாரணைக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்தால் ஆஜராக வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியுள்ளது.

இதனிடையே, ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்பேரில், டெல்லி திகார் சிறையில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சிறையில் வைத்தே அவரை கைது செய்தனர். இதனால் சிபிஐ வழக்கில் ஜாமின் பெற்றாலும் அமலாக்கத்துறையினரின் பிடியில் சிதம்பரம் தற்போது சிறையில் உள்ளார். இந்த வழக்கிலும் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top