100 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை 80 ரூபாய்க்கும் கீழே இறங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் 20 காசுகள் குறைந்து 79 ரூபாய் 87 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டீசல் விலையும் 20 காசுகள் குறைந்து 75 ரூபாய் 82 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 நாட்களுக்குப் பின் தற்போது தான் பெட்ரோல் விலை 80 ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
0 Comments