பிக் பாக்கெட் அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் கைது!

பிக் பாக்கெட் அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் கைது!

in News / National

ஹைதராபாத் நகரில் கைது செய்யப்பட்ட பிக்-பாக்கெட் கொள்ளையன் மாதம் ரூ .30 ஆயிரம் வாடகை தரும் ஆடம்பரமான சொகுசு பிளாட்டில் வசித்து வந்துள்ளார்.

ஹைதராபாத்தில் 400க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் சிக்கிய பிக்பாக்கெட் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர் . அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2004 முதல் அந்த நபர் பிக் பாக்கெட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர் கடந்த காலங்களில் பல முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார், அதன்பிறகும் அவர் மீண்டும் மீண்டும் தனது தொழிலில் ஈடுபட்டார்.

ஆனால் இவரது பூர்விகம் உத்தரபிரதேசத்தின் அலிகார். இவரது பெயர் தனேதர் சிங் குஷ்வா என்பதும் தெரியவந்தது. பல மாநிலங்கள் சென்று கொள்ளையடித்த அவர் இறுதியாக ஹைதராபாத்தில் குடும்பத்துடன் தங்கினார். ஆரம்பத்தில் சிறு சிறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட அவர் பின்னர் சூதாட்டக்காரர்களுடன் தொடர்புகொண்டு சூதாட்டத்தில் பணம் சமபாதிக்க தொடங்கினார். பின்னர் அவர் கிரிக்கெட் புக்கிகளுடன் தொடர்பு கொண்டு கிரிக்கெட் பந்தயத்தில் சம்பாதித்தார். அந்தத் தொகையுடன், குஷ்வா ஆக்ராவில் இரண்டு கடைகளையும், அவரது மனைவியின் பெயரில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டையும் வாங்கினார்.

அவர் ஹைதராபாத்தில் ஒரு பிளாட்டை ஒரு மாதத்திற்கு ரூ .30,000 ம் வாடகைக்கு எடுத்து, தனது மகளையும் மகனையும் ஒரு ஆடம்பரமான பள்ளியில் சேர்த்து , ஆண்டு கட்டணம் தலா ரூ .2 லட்சம் பணம் செலுத்துகிறார். இவ்வாறு அவரை கைது செய்த ரயில்வே காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. மக்களிடம் திருடிய அவர் ரயில்வே காவலரை தாக்கி வழிப்பறி செய்தப்போது சிக்கியுள்ளார். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது இவன் கதையில் உண்மையாகியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top