இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தயாரித்துள்ள பினாகா ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டி அமைப்பு கொண்ட பினாகா ஏவுகணை, 90 கி.மீ வரை பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் உடையது .
இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள ஏவுகணை சோதனை தளத்தில் இன்று நடைபெற்றது. இதே தொழில்நுட்பத்தில் தயாரான 75 கி.மீ தூர இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை நேற்று பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments