கோவை மங்களூர் ரயிலில் இருந்து, தவறி விழ இருந்த பயணியை, பாத்திரமாக ஏற்றி விட்ட ரயில்வே தலைமை காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கோவையில் இருந்து மங்களூர் செல்லும், கோவை - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை கோவை ரயில் நிலையம் நடைமேடை எண் 3 ல் இருந்து, காலை 6.40 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட ரயிலில் மங்களூர் செல்ல வந்த கனவன், மனைவி, மகன் என ஒரு குடும்பத்தினர், ஓடும் ரயிலில் பைகளுடன் ஏற முயன்றனர். அப்போது மகன் மற்றும் கணவன் ஏறிய நிலையில், பைகளுடன் ஏற முயன்ற அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழும் வகையில் பின்நோக்கி சாய்ந்தார் . இதை கண்ட ரயில்வே தலைமை காவலர் நொடி பொழுதில் சாதூரியமாக செயல்பட்டு அவரை தாங்கி பிடித்து, ரயில் பெட்டியினுள் அனுப்பி வைத்தார்.
இந்த காட்சிகள் ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை கண்ட கோவை ரயில் நிலைய இயக்குநர் துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலர் பாலகிருஷ்ணனை பெரிதும் பாராட்டியதோடு, சான்றிதழ் மற்றும் ரூ.500 வெகுமதி வழங்கி கவுரவித்தார். இவரது இந்த செயலுக்கு ரயில்வே ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
0 Comments