புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு

புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு

in News / National

புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும்

* 21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்

* கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும்

* இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்

* இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே புதிய கல்விக்கொள்கை உருவாக்கம்

* கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம் - பிரதமர் மோடி பெருமை

* பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களை படித்து வருகிறோம்

* எதைப் படித்தார்களோ அது வேலைக்கு உதவவில்லை

* வேகமாக மாறிவரும் உலகில், இந்தியா தனது பயனுள்ள பாத்திரத்தை வகிக்க வேகமாக மாற வேண்டும் - பிரதமர்

* இந்தியாவின் கல்வி மிகவும் நவீனமாக மாற வேண்டும், இங்கே திறமைக்கு முழு வாய்ப்பு கிடைக்கிறது - பிரதமர்

* பல பட்டங்கள் பெற்றும் வேலைக்கு உதவவில்லை நம்பிக்கையை தரவில்லை

* நம் குறைபாடுகளை முதலில் நாம் உணர வேண்டும்

* 21 ஆம் நூற்றாண்டு அறிவின் யுகம்.

* கல்வி, ஆராய்ச்சியில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்

* மாணவர்களை வழி நடத்துவது தேசத்திற்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும்

* இளைஞர்கள் 3 விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்

* கல்வி, கேள்வி, தீர்மானித்தால் ஆகிய மூன்றும் முக்கியம்

* கேள்வி கேட்டால்தான் தெளிவு பிறக்கும். கல்வியின் பயன் வாழ்க்கைக்கு உதவ வேண்டும். பெயருக்காக படிக்கக் கூடாது

* புதிய கல்விக் கொள்கை மூலம் கல்விசார் துறையில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன - பிரதமர்

* கல்வி வாழ்க்கைக்கு உதவ வேண்டும். அதைத்தான் புதிய கல்விக்கொள்கை தெளிவுபடுத்துகிறது

* இது தனிமனித திட்டம் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம்

* ஒரே ஒரு பாடத்திட்டம் அனைத்திற்கும் தீர்வாக அமையாது

* பலவிதமான பகுதிகளில் மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்

* அம்பேத்கர் கூறியபடி, கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படியாக இருக்க வேண்டும்

* வேலை தேடுவதை விட்டு, வேலை கொடுப்பதாக கல்வித்திட்டம் அமைய வேண்டும்

* 20 வளர்ந்த நாடுகள் தாய்மொழியில் கற்றுதான் முன்னேற்றம் கண்டுள்ளன

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top