பேருந்தை அதிவேகமாக ஓடியதற்காக பேருந்தின் கூரை மீது ஓட்டுநர்களை தோப்புக்கரணம் போடச்செய்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து மோவ், மன்பூர் மற்றும் பிதாம்பூர் வரை பேருந்துகளை இயக்கும் சில ஓட்டுநர்கள் பேருந்துகளை அதிவேகமாக இயக்குவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.. இது தொடர்பாக நகராட்சி தலைவர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அப்போது மிகவேகமாக பேருந்தை இயக்கும் ஓட்டுநர்களுக்கு நீங்களே தண்டனை கொடுங்கள் என நகராட்சி அதிகாரி கூறியதாக தெரிகிறது.
அதன்படி அதிவேகமாக இயக்கிய பேருந்துகளை சிறைப்பிடித்து பேருந்தின் மேற்கூரை மீது ஏற்றி ஓட்டுநர்களை எற செய்து தோப்புக்கரணம் போடச்செய்தனர், மேலும் இனிமேல் அதிவேகமாக ஓடக்கூடாது என எச்சரித்தும் அனுப்பினார்.. பொதுமக்கள் கூடி நிற்க சாலையின் நடுவே நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
0 Comments