ரயில்வே இணையதளங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர மற்ற எந்த பிராந்திய மொழிகளில் தகவல்களை தர திட்டம் இல்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில்வே இணையதளங்களில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிராந்திர மொழிகளிலும் தகவல் தர வேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, பிராந்திய மொழிகளில் தகவல் தர எந்த திட்டமும் இல்லை என்று ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், தற்போது தமிழ், கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் அச்சடிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
0 Comments