ரஷ்ய கடல் எல்லையில் மாயமான 2 தமிழர்கள்: வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

ரஷ்ய கடல் எல்லையில் மாயமான 2 தமிழர்கள்: வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

in News / National

ரஷ்ய கடல் எல்லையில் நிகழ்ந்த தனியார் கப்பல் விபத்தில் மாயமான 2 தமிழர்களை காணவில்லை என வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சகாயம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 2019 ஜன 21 ஆம் தேதி ரஷ்யா கடல் எல்லையில், எல்.பி.ஜி கேஸ் கசிவின் காரணமாக கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் கப்பலில் இருந்தவர்கள் பலர் உயிர் தப்பினர். அந்த கப்பலில் சென்ற தமிழர்கள் செபாஸ்டின் பிரிட்டோ, அவினாஷின் நிலை என்னவானது பற்று எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. அவர்களை மீட்டு நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாயமான 2 தமிழர்கள் தொடர்பாக காணவில்லை என வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும், வழக்கு விசாரணையை தஞ்சை, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கண்காணிக்கவும் உத்தரவிட்டது. மேலும், காணாமல் போன தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top