ஒரே இரவில் தமிழகம் முழுதும் 870 ரவுடிகள் கைது! அரிவாள், துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்

ஒரே இரவில் தமிழகம் முழுதும் 870 ரவுடிகள் கைது! அரிவாள், துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்

in News / National

ஒரே இரவில் தமிழகம் முழுதும் 870 ரவுடிகள் கைது! அரிவாள், துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுதும், போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், ஒரே இரவில் 870 ரவுடிகள் பிடிபட்டனர். அவர்களில், 450 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கடுமையான எச்சரிக்கைக்கு பின், 420 பேரிடம் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது.

சிக்கிய ரவுடிகளிடம் இருந்து, 250 கத்தி, அரிவாள் மற்றும் மூன்று துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைதுாக்கும் கொலை குற்றங்களை குறைக்க, இந்த அதிரடிநடவடிக்கையை டி.ஜி.பி., சைலேந்திரபாபு எடுத்துள்ளார்.தமிழகத்தில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். இதில், 6,000 ரவுடிகளுடன் சென்னை முதலிடத்தில் இருப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப ரவுடிகளை, 'ஏ பிளஸ்'மற்றும் 'ஏ,பி,சி' என, போலீசார் வகைப்படுத்தி உள்ளனர்.

பட்டியல்

பெரிய தாதாக்கள், 'ஏ பிளஸ்' பட்டியலில் உள்ளனர். கூலிக்கு கொலை செய்யும் ரவுடிகள், 'ஏ' பிரிவிலும், அடிதடி, மாமூல் வசூலிப்பு என, அட்டூழியம் செய்பவர்கள், 'பி' பிரிவிலும், கொலை முயற்சி, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவோர், 'சி' பிரிவு பட்டியலிலும்உள்ளனர். இவர்களுடன் திருந்தி வாழ்வதாக கூறப்படும் பழைய குற்றவாளிகள் பட்டியலையும், போலீசார் பராமரித்து கண்காணித்து வருகின்றனர்.எனினும், தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1990களில் வாலாட்டி வந்த அயோத்திகுப்பம் வீரமணி, வெள்ளை ரவி, 'பங்க்' குமார் என, ஏ பிளஸ் ரவுடிகள், 'என்கவுன்டரில்' போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பழிக்கு பழியாக ரவுடிகள், ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்து, தங்கள் கதைகளை முடித்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு. 2000ம் ஆண்டுக்கு பின், ரவுடிகளுக்கு எதிரான, போலீசாரின் துப்பாக்கி சத்தம் குறைந்து போனது. இதனால், ரவுடிகள் மீண்டும் தலைதுாக்க துவங்கினர். அதுவும் இளம் வயதினர், கூலிப்படையாக மாறி உள்ளனர்.

சமீபத்தில், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் ம.ஜ.க., நிர்வாகி வசீம் அக்ரம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை, கஞ்சா வியாபாரியான, 'டீல்' இம்தியாஸ் என்பவர் முன்னின்று நடத்தி உள்ளார். இதற்காக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 21 - 25 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினரை, கூலிப்படையினராக மாற்றியது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேபோல, நெல்லை, துாத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களிலும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இரு தினங்களுக்கு முன், பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக, திண்டுக்கல் மாவட்டம், நந்தவனப்பட்டியில் நிர்மலாதேவி என்பவர் தலை துண்டித்து, கொலை செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் மீண்டும் தலைதுாக்கி உள்ளதால், ஒழிப்பு நடவடிக்கையை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு முடுக்கி விட்டுள்ளார். அவரது உத்தரவின்படி, மாநிலம் முழுதும் போலீசார் நேற்று முன்தினம் விடிய விடிய ரவுடிகளின் வீடு, பதுங்கி இருக்கும் இடங்கள், கள்ளக்காதலியின் வீடுகள் என, பல இடங்களில் அதிரடியாக புகுந்து, 870 பேரை சுற்றி வளைத்தனர்.

உறுதிமொழி பத்திரம்

சென்னை கொருக்குப் பேட்டை பகுதியில் மாவா விற்பனையில் ஈடுபட்டிருந்த உஷா, காளியப்பன் உள்ளிட்ட ரவுடிகளை சுற்றி வளைக்கப்பட்டனர். அதேபோல் எம்.கே.பி., நகரில், வெற்றிவேல், செல்வகுமார், வியாசர்பாடியை சேர்ந்த கவுதம் ஆகியோரும் பிடிபட்டனர்.ரவுடிகள், 450 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், 181 பேர், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள்.மேலும் ரவுடிகள் 420 பேரிடம், 'ஓராண்டுக்கு எவ்வித குற்றங்களிலும் ஈடுபட மாட்டோம். மீறினால், எங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்' என, உறுதிமொழி பத்திரம் பெற்றுள்ளனர்.பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து, 250 கத்திகள், அரிவாள்கள் என பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; நாட்டு துப்பாக்கிகள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன. ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து நடந்துவருகிறது.

ரவுடிகள் வேட்டை குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:

நடவடிக்கை

சென்னையில், 716 ரவுடிகளை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் கொலை வழக்கில் ஈடுபட்ட, 57 பேர் உட்பட, 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 13 பேர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்தவர்கள்.இவர்களிடம் இருந்து, 20க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரவுடிகளை ஒழிக்க, இரண்டு உதவி கமிஷனர்கள் தலைமையில், சிறப்பு கட்டுப்பாட்டு பிரிவு துவங்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top