வீட்டில் சடலமாகக் கிடந்த  ஆர்.எஸ்.எஸ் ஊழியர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும்  8 வயதுக் குழந்தை!

வீட்டில் சடலமாகக் கிடந்த ஆர்.எஸ்.எஸ் ஊழியர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் 8 வயதுக் குழந்தை!

in News / National

மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர், அவரின் கர்ப்பிணி மனைவி மற்றும் அவர்களது 8 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பாந்து கோபால் பால். ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர், சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்து அந்த இயக்கத்தின் வாரக் கூட்டங்களில் பங்கேற்றார். துர்கா பூஜையைப் பாந்து கோபால் குடும்பத்தினர் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். ஆனால், இரு நாட்களாக அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. விஜயதசமி தினத்தன்று பாந்து கோபால் வீட்டை அக்கம் பக்கத்தினர் உடைத்துப் பார்த்த போது, உள்ளே பாந்து கோபால், அவரின் மனைவி பியூட்டி மற்றும் 8 வயது மகன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர். பாந்து கோபாலின் மனைவி 8 மாத கர்ப்பிணி.

அதுகுறித்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் , போலீஸில் புகார் அளித்தனர்.போலீஸார் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் குடும்பத்துடன் கொல்லப்பட்டுக் கிடப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவியதால் பதற்றம் நிலவியது. வன்முறை ஏற்படாமல் தடுக்க போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''மேற்கு வங்கத்தில் தொடர்ந்து, இது போன்ற குரூரச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. போலீஸ் துறையை தன் கையில் வைத்துக் கொண்டிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

`ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்த காரணத்தினால் ஆசிரியர் பாந்து கோபால் குடும்பத்தோடு அழிக்கப்பட்டுள்ளார்' என பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top