பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய எல்லையில் சிறிய டிரோன்கள் அவ்வப்போது நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், சிறிய டிரோன்கள் பஞ்சாப் சர்வதேச எல்லையை கடந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர்.
அந்த டிரோன்கள் துப்பாக்கிகளையும், போதைப்பொருட்களையும் கடத்தி வருவதற்கு உபயோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.கடந்த திங்கட் கிழமை இரவு நேரத்தில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் ஹுசானிவாலா எல்லைப்பகுதியின் மேல் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லையில் ஒரு டிரோன் பறந்து செல்வதை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
இதன் காரணமாக ஆயிரம் அடிக்கு கீழ் பறக்கும் சிறிய டிரோன்களை சுட்டுத்தள்ள எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
0 Comments