தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

in News / National

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டிஜிபி ஜே.கே. திரிபாதி நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1987ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபு 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் எஸ்.பியாகவும், சென்னை அடையாறில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாகவும் முத்திரை பதித்தவர் சைலேந்திரபாபு.

2010-இல் கோவையில் ஆணையராக இருந்தபோது, பள்ளிக்குழந்தைகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

வடக்கு மண்டல ஐஜியாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திர பாபு கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாகவும் பதவி வகித்துள்ளார்.

சிறைத்துறை தலைவராக இருந்தபோது கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார்.

தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை டிஜிபியாக இருந்தவர். ரயில்வே காவல்துறை டிஜிபியாக தற்போது பதவி வகிக்கிறார்.

குடியரசுத்தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்கான பிரதமரின் பதக்கம், வீரதீர செயல்களுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றவர்.

சைலேந்திர பாபு, குமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவர். எம்.எஸ்.சி, எம்.பி.ஏ, பி.ஹெச்.டியையும், சைபர் கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்தவர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top