தீபாவளி  பண்டிகை - சில சுவாரஸ்ய தகவல்கள்

தீபாவளி பண்டிகை - சில சுவாரஸ்ய தகவல்கள்

in News / National

தீபாவளியை ஒரு நாள் கொண்டாடுவோரும், நான்கு நாள், ஐந்து நாள் கொண்டாடுவோரும் உண்டு என்றாலும் அமெரிக்காவிலோ இல்லை கனடாவிலோ வார வேலை நாட்களில் வந்தால் அதாவது திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை உள்ள எந்த நாட்களில் தீபாவளி வந்தாலும் அந்த வார இறுதி நாளான சனிக்கிழமையோ, ஞாயிற்றுக்கிழமையோ தான் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் ஒருநாள் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் இந்தியாவின் சில மாநிலங்களில் அதாவது ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தீபாவளி ஐந்து நாட்கள் என்ற அளவில் வெகு அமர்க்களமாகக் கொண்டாடப்படுகிறது

இந்தியத் தத்துவ மரபானது ஐந்தாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை உடையது. இந்த மரபில் தீபாவளி குறித்து ஏராளமான கதைகள் புழக்கத்தில் இருக்கிறது. தீபாவளியின் தோற்றம் குறித்த கதையாக நரகாசுரனைக் கிருஷ்ணனும், சத்தியபாமாவும் சேர்ந்து அழித்த கதைதான் எல்லோருக்கும் தெரிந்த ரகசியக் கதை.

நரகாசுரனைச் சத்தியபாமா வதம் புரிந்ததைத் தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். இதற்குரிய கதை 'காளிகா புராணத்திலும் வேறு சில புராணங்களிலும் உப கதையாகச் சொல்லப்பட்டுள்ளது.
கிருஷ்ணன் சத்தியபாமா சம்பந்தப்பட்ட விழாவாக முழுக்க முழுக்க இருந்தால் இது வைணவ விழாவாகக் கருதப்பட்டிருக்கும். ராமநவமி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற திருநாள்களைக் கொண்டாடத் தயங்கும் தீவிர சைவர்கள் தீபாவளியையும் ஒதுக்கியிருப்பார்கள் அல்லவா? தீபாவளியை இந்தியர்கள் அனைவருமே கொண்டாடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக் கொள்கிறார்கள்.

தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான இந்தியாவில் செய்யாத சிறப்பை சிங்கப்பூர் செய்திருக்கிறது. ஆம்! தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே..

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top