தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பும் வகையிலான பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்றும், அதையும் கூட குறிப்பிட்ட சில பகுதிகளில் வைத்து மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விதித்திருந்தனர்.
இதையடுத்து தமிழகஅரசின் சார்பில் அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரை தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டுமென வழக்கறிஞர் பி.வினோத் கண்ணா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் வினோத் கண்ணா ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள் "தமிழகத்திலும் மற்ற மாநிலங்கள் போல 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்துகொள்ளலாம்" எனவும் தெரிவித்தனர்.
0 Comments