மத்திய அரசு நடைமுறை படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து முதல்வர் பழனிசாமி இன்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருப்பது வேதனை அளிப்பதாகவும் தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்றும் இருமொழி கொள்கையே தொடரும். தமிழ் மொழிக்கோ அல்லது தமிழுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
மேலும், தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்தந்த மாநிலங்களில் தங்களுக்கு ஏற்ப கொள்கையை பயன்படுத்திக் கொள்ள பிரதமர் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “#NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வருக்கு நன்றி! மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments