ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 14ம் தேதிக்குள் கரை திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 14ம் தேதிக்குள் கரை திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

in News / National

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 14 ஆம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

14ஆம் தேதியன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாகி வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து 16ஆம் தேதியன்று கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் புயலாக உருவெடுக்கக் கூடும் என்றும் இதன் காரணமாக குமரி கடல் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதி லட்சத்தீவுகள் மற்றும் மால தீவுகள் கடல் பகுதிகள் மற்றும் இந்திய பெருங்கடல் ஆகிய கடற்பகுதியில் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களுக்கு கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மீனவர்கள் மேற்கூறிய நாட்களில் மேற்கூறிய கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ஏற்கனவே கடலுக்குள் சென்று உள்ள மீனவர்கள் 14 ஆம் தேதி அன்று காலைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 44 கடலோர மீனவகிராமங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகில்மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது படகினை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தியுள்ளனர்.மேலும் மேற்குகடற்கரை பகுதியில் ஏற்கனவே மீன்பிடி தடைகாலம் அமுலில் இருப்பினும் 14 ம்தேதிக்குள் விசைப்படகுகள் கரைதிரும்புமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top