பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

in News / National

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

➤நாளை பிற்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருங்களத்தூரில் இருந்து சென்னை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், ஜிஎஸ்டி சாலை வழியாக அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக ஜீரோ பாயின்ட் சந்திப்பில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும்.

➤சென்னை தென் பகுதியில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக, குரோம்பேட்டை - தாம்பரம் மார்க்கமாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்த வேண்டும்.

➤தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

➤நாளை பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பில் இருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக 100 அடி சாலை வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.

➤நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை, ராஜீவ்காந்தி சாலையில் (ஓஎம்ஆர்) இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து பெரும்பாக்கம் வழியாக திருப்பிவிடப்படும்.

➤கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் இருந்து முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதியில்லை. நாளை மறுநாள் சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, ராஜீவ்காந்தி சாலையில் (ஓஎம்ஆர்) இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.

➤நாளை மறுநாள் காலை 7 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் இருந்து முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதியில்லை.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top