வோடபோன் ஐடியா புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் விபரம்!

வோடபோன் ஐடியா புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் விபரம்!

in News / National

இந்தியாவின் முக்கிய வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா தனது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்-ஐ அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள இந்த நிதி ஆண்டிற்கான காலாண்டின் முடிவில், ரூ.50,921 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ள இந்நிறுவனம், இழப்புகளை சரி செய்வதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வோடபோன் ஐடியாவின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் விபரம் :

காம்போ வவுச்சர்ஸ் (28 நாட்கள்) :

1. ரூ. 49 - ரூ.38 டாக் டைம், 100 எம்பி டேட்டா, 2.5 ப/நொடி டேரிஃப்.

2. ரூ. 79 - ரூ. 64 டாக் டைம், 200 எம்பி டேட்டா, 1 ப/நொடி டேரிஃப்.

வரம்பற்ற பேக்ஸ் (28 நாட்கள்) :

1. ரூ. 149 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ்.

2. ரூ. 249 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

3. ரூ. 299 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

4. ரூ. 249 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

வரம்பற்ற பேக்ஸ் (84 நாட்கள்) :

1. ரூ. 379 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), 6 ஜிபி டேட்டா, 1000 எஸ்எம்எஸ்.

2. ரூ. 599 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

3. ரூ. 699 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

வரம்பற்ற வருடாந்திர பேக்ஸ் (365 நாட்கள்) :

1. ரூ. 1499 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 12000 நிமிடங்கள்), 24 ஜிபி டேட்டா, 3600 எஸ்எம்எஸ்.

2. ரூ. 2399 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 12000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

முதல் ரீசார்ஜ் :

1. ரூ. 97 - ரூ. 45 டாக் டைம், 100 எம்பி டேட்டா, 28 நாட்கள்.

2. ரூ. 197 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ்.

3. ரூ. 297 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

4. ரூ. 249 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

இந்த புதிய வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டாங்களை, மை வோடபோன் ஆப், மை ஐடியா ஆப், www.vodofone.in, www.ideacellular.com, பே டிஎம், கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்றவற்றின் மூலம் செய்யலாம் எனவும், வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் இருந்து *121# என்ற எண்ணை டயல் செய்தும் இந்த திட்டங்களை பெறலாம் எனவும் வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான வோடபோன் ஐடியா அறிவித்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top