காதலித்து விட்டு திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த வாலிபர் மீது காதலி ஆசிட் வீச்சு!

காதலித்து விட்டு திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த வாலிபர் மீது காதலி ஆசிட் வீச்சு!

in News / National

உத்தர பிரதேசத்தில் அலிகார் நகரில் ஜீவன்கார் பகுதியில் வசித்து வருபவர் பைசாத் (வயது 20). இவர் இளம்பெண் ஒருவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் இளம்பெண்ணை சந்திப்பது, பேசுவது போன்றவற்றை அவர் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், பண்டிட் தீன் தயாள் இணை மருத்துவமனையில் ஆசிட் காயங்களுடன் பைசாத் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆசிட் வீசியதால் அவரது கண்கள் பாதிப்படைந்து உள்ளன. இதுபற்றி பைசாத்தின் தாயார் ருக்ஷானா கூறும்பொழுது, அந்த இளம்பெண் எனது மகனை தொலைபேசியில் அழைத்து உள்ளார்.

ஆனால், எனது மகன் தொலைபேசியை எடுக்க மறுத்திருக்கிறார். சம்பவத்தன்று காலையில் எனது மகனிடம் பேசியிருக்கிறார்.

எனது மகனுடன் அந்த இளம்பெண் தொடர்பில் இருக்க கூடும் என்று எனது இளைய மகன் என்னிடம் கூறினார். இதனிடையே,தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி எனது மகனுடன் அந்த இளம்பெண் கேட்டிருக்கிறார். அதற்கு அவன் ஒப்பு கொள்ளவில்லை. இதன்பின்பு தான் அவன் மீது ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது என கூறியுள்ளார்.

இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 326 ஏ என்ற பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்து இளம்பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top