கொதிக்கும் சாம்பார் அண்டாவில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் : ஆந்திராவில் அரங்கேறிய சோக நிகழ்வு!

கொதிக்கும் சாம்பார் அண்டாவில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் : ஆந்திராவில் அரங்கேறிய சோக நிகழ்வு!

in News / National

ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுவன் கொதிக்கும் சாம்பார் அண்டாவில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மதிய உணவு வேளையின் பொழுது புருஷோத்தமன் என்கின்ற 6 வயது சிறுவன் அவரது நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட உணவு வாங்கும் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் படிக்கும் சக நண்பர்கள் மற்றும் சிறுவர்களிடையே உணவு வாங்கும் பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது புருஷோத்தமன் தள்ளுமுள்ளுவில் சிக்கி அவர் முன் இருந்த கொதிக்கும் சாம்பார் அண்டாவில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர் பின் மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து சிறுவன் உயிர் பறிபோனதை கண்டித்து அவரது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின் இது குறித்து அவர்களது பெற்றோர்கள் தெரிவிக்கையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கும் குழந்தைகளை கண்காணிக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததுமே இந்த விபத்திற்கு காரணம் என்றும் குழந்தை இறந்ததற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

6 வயது சிறுவன் கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top