சீருடையில் இருந்த பெண் போலீஸ்க்கு ”ஐ லவ் யூ” சொல்லி தர்ம அடி வாங்கிய இளைஞர்!

சீருடையில் இருந்த பெண் போலீஸ்க்கு ”ஐ லவ் யூ” சொல்லி தர்ம அடி வாங்கிய இளைஞர்!

in News / National

தெலுங்கு யூடியூப் சேனலில் ஒரு இளைஞர் பெண்களுக்குச் சென்று “ஐ லவ் யூ” சொல்லி பிராங்க் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் சீருடையில் இருந்த ஒரு பெண் போலீசிடம் சென்று “ஐ லவ் யூ” சொல்லி பிராங்க் செய்துள்ளார். இதைக் கேட்டதும் ஆத்திரம் அடைந்த அந்த பெண் போலீஸ் அவருக்குத் தர்ம அடி கொடுத்தார்.

அந்த வீடியோவில் துவக்கத்தில் அந்த பெண் போலீசைக் காதலிப்பதாக அந்த யூடியூபர் உருகி உருகிச் சொன்னபோது அந்த பெண் போலீஸ் அவரை அடிக்கப் போய் பின்னர் போலீஸ் ஸ்டேஷனிற்கு நடக்கும்படி கூறினார்.

ஒரு கட்டத்தில் மிகவும் கடுப்பான அந்த பெண் போலீஸ் அவரை அடித்து விடுகிறார். அதன்பின்பு தான் ஒரு யூடியூபர் உங்களது சகோதரி ஒருவர் தான் எங்களைத் தொடர்பு கொண்டு உங்களை இப்படி பிராங்க் செய்ய சொன்னார் என கூறினார்..

அதை கேட்டதும் மேலும் கடுப்பான அந்த பெண் போலீஸ் அந்த யூடியூபரை கெட்டவார்த்தைகளில் பேசியுள்ளார். அந்த இடங்களில் பீப் சத்தம் போடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தெலுங்கு பேசும் மக்களிடையே வைரலாகி வருகிறது. தற்போது தமிழ் மக்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top