ஆபாச படங்கள் சிறு குழந்தைகளை பாதிக்கிறது: வெங்கையா நாயுடு!

ஆபாச படங்கள் சிறு குழந்தைகளை பாதிக்கிறது: வெங்கையா நாயுடு!

in News / Politics

இணையதளங்களில் வெளியாகும் ஆபாச படங்கள் சிறு குழந்தைகளை தொடர்ந்து பாதிப்பதாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இணையதளத்தில் ஆபாச படங்களை தடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி விஜிலா சத்யானந்த் கோரிக்கை விடுத்தார். அவரது இந்த கோரிக்கையை ஆதரித்து பேசிய சபாநாயகர் வெங்கையாநாயுடு, இணையதளங்களில் வெளியாகும் ஆபாச காணொளிகள் சிறு குழந்தைகளை தொடர்ந்து பாதிக்கிறது. ஆபாச படங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கண்டு பெற்றோர்கள் மன உளச்சலுக்கு ஆளாகின்றனர். பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ள போதும் ஆபாச காணொளிகள் இளையதளங்களில் வெளியாகின்றன என வருத்தம் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய ஸ்மிருதி இரானி, ஆபாச காணொளிகள் உள்ள இணையதளங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top