ரயில்வே முழுமையாக தனியார் மயமாக்கப்படாது - பியூஷ் கோயல்!!

ரயில்வே முழுமையாக தனியார் மயமாக்கப்படாது - பியூஷ் கோயல்!!

in News / Politics

இந்திய ரயில்வே முழுமையாக தனியார் மையமாக்க போவதில்லை என்றும், பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக சில வணிக மற்றும் ஆன்போர்ட் சேவைகளை மட்டுமே தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார் .

நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரில் மக்களவையின் கேள்வி நேரத்தில், இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்குதல் குறித்த பல கேள்விகளும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் முன்பு வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவில் அடுத்த 12 ஆண்டுகளில் ரயில்வே துறை மேம்பாட்டிற்காக மட்டும் மத்திய அரசு 50 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒரு துறையின் மேம்பாட்டிற்காக இத்தனை செலவுகளையும் மேற்கொள்வதென்பது எந்த அரசிற்கும் சிரமம் தான்" என்று கூறியுள்ளார்.

மக்களுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்பது மட்டும் தான் அரசின் விருப்பம், அதற்காக எடுக்கப்பட்டது தான் இந்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது திட்டங்களை தோன்றும் வண்ணம் உள்ள நிலையில், அனைத்திற்கும் அரசாங்கத்தால் செலவு செய்ய இயலாது. தினசரி பயணிகள் அதிகரித்து வருவதை, அவர்களுக்கு நல்லதொரு பயணத்தை உருவாக்கி தருவது ரயில்வே துறையின் கடமை என்பதால் தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வணிக ரீதியாகவும் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் பொறுப்பு மட்டுமே தனியார் துறைகளுக்கு உள்ளதென்றும், எப்போதும் போல மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ரயில்வே அதிகாரிகள் உள்ளனர் என்றும் உறுதியளித்துள்ளார் பியூஷ் கோயல்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top