காவல்துறைக்கே பாதுகாப்பில்லை; பொதுமக்களுக்கு எப்படி இருக்கும்? : ஹரி நாடார் கேள்வி

காவல்துறைக்கே பாதுகாப்பில்லை; பொதுமக்களுக்கு எப்படி இருக்கும்? : ஹரி நாடார் கேள்வி

in News / Politics

தமிழக காவல்துறைக்கே உரிய பாதுகாப்பு இல்லையென்றால், பொதுமக்களுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பு இருக்கும் என பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து, சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் நாடார் அமைப்பு மற்றும் நாடார் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஹரி நாடார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஒரு கோடி ரூபாய் உதவித்தொகையும் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top