சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

in Society / Social Cause

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றிலும் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறார்கள்.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

பாலமோர் சாலையில் பயணிப்போரிடம் கேட்டால் மோசமான சாலைகளின் தரம், போக்குவரத்து நெரிசல் என்று ஏராளமான அவதிகளை முன்வைக்கிறார்கள். நாகர்கோவிலிலிருந்து புத்தேரி , இறச்சகுளம் வழியாக செல்லும் பேருந்துகள் வடசேரி கிராம அலுவலகம் வழியாகச் சென்று கிருஷ்ணன்கோவில் வந்து எஸ்.எம்.ஆர்.வி பள்ளியின் முன்பு சென்று பாலமோர் சாலையில் சேர்கின்றன. ஆரல்வாய்மொழியிலிருந்து செண்பகராமன்புதூர் , ஆண்டித்தோப்பு வழியாக வரும் வாகனங்கள் புத்தேரி வழியாக வந்து எஸ்.எம்.ஆர்.வி பள்ளி முன்பாக நேரே பயணித்து வடசேரி வருகின்றன. இந்த இரண்டு மார்க்கத்திலுமே பயணிக்கும் வாகனங்கள் சந்திக்கும் எஸ்.எம்.ஆர்.வி பள்ளி சந்திப்புதான் காலைநேரத்து இடியாப்பச் சிக்கலில் சிக்கியிருக்கின்றது.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

கிருஷ்ணன் கோவிலில் இருந்து எஸ்.எம்.ஆர்.வி பள்ளி சந்திப்பில் பேருந்துகள் திரும்பும் போது பேருந்தின் நீளத்திற்கு திரும்பும் புள்ளி இல்லாத அளவிலான குறுகலான பகுதி அது. ஆகையால் பேருந்து ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்காளாகின்றனர். இதிலும் கொடுமை என்னவென்றால் சிலவாகன ஓட்டிகள் வேண்டுமென்றே வடசேரியிலிருந்து கீழே இறங்கி எஸ்.எம்.ஆர்.வி பள்ளியை நோக்கி வரும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் தடுத்து மேலும் போக்குவரத்து சிக்கலை உருவாக்குகின்றனர்.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

எஸ்.எம்.ஆர்.வி பள்ளி சந்திப்பு மிகவும் குறுகலான ஒன்று. மேலும் இந்தப் பகுதியில் நான்கு பள்ளிகள் இருக்கின்றன. இரண்டு மருத்துவமனைகள் இருக்கின்றன. ஏராளமான கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி வாகனங்களில் ஏறுவதற்கான முக்கிய நிறுத்தங்களும் இங்கு இருக்கின்றன.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

மேற்கூறிய நான்கு பள்ளிகளுக்கும் செல்லும் மாணவர்கள் இந்த நான்கு சாலை சந்திப்பில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

இது வழக்கமான காட்சிதான் என்றாலும் கூட இங்கு போக்குவரத்தை சரி செய்யும் முறைதான் சற்று ஆபத்தானதாக இருக்கிறது. அதுதான் போக்குவரத்து சமிக்ஞை. ஒரே ஒரு காவலர் மட்டுமே இப்பகுதியில் பணியில் நிற்கிறார். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இங்குள்ள போக்குவரத்தைச் சரி செய்பவர்கள் யாரென்றால் அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள். அவர்கள் தங்கள் வேலையைப் போட்டுவிட்டு பொதுநலத் தொண்டாக நினைத்துக் கொண்டு இப்பணியை செய்தாலும் கூட முறையான சமிக்ஞை முறைகள் அவர்களுக்கு தெரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் குழப்பத்துக்கு ஆளாகிறார்கள்.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

வரச் சொல்கிறாரா? போகச் சொல்கிறாரா ? நிற்கச் சொல்கிறாரா என்பது நிறைய சமயங்களில் புரியாமல் சில விபத்துக்களும் அங்கே நடந்திருக்கின்றன. சில சமயங்களில் அவர்கள் உரக்க ஊதும் விசில் சத்தம் பயணிகளையும் , பாதசாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்து குழப்பி விடுகிறது.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

மொழி தோன்றும் முன்னே ஆதிமனிதர்கள் சைகளாலும் , சமிக்ஞைகளாலும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டார்கள். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறதென்றால் அது போக்குவரத்துத் தொடர்பான துறைகளில்தான் என்பது முக்கியமான ஒரு விஷயம்.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

கடல் போக்குவரத்தில் ஒளியால் தொடர்பு கொள்ளுதல், சாலைகளில் மற்றும் இருப்புப் பாதைகளில் பல வர்ண விளக்குகளால் தொடர்பு கொள்ளுதல் என்று பட்டியல் கொஞ்சம் சுருங்கும் போது அது மூன்று அல்லது நான்கு சாலைகளின் சந்திப்பில் நிற்கும் போக்குவரத்துக் காவல்துறையின் ஊழியர்களிடம் வந்து நிற்கும். சமிக்ஞை முறைகள் குறித்து நன்கு பயிற்சி பெற்ற காவலர்களே இந்தப் பணியில் அமர்த்தப் படுவர். அதுதான் முறையும் கூட.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

போக்குவரத்து சட்டம் மற்றும் காவல்துறை முறைமைகள் இப்படியிருக்கையில், இவ்வாறான தருணங்களில், இம்மாதிரியான முக்கியமான பணிகளில் முறையாகப் பயிற்சி பெறாத தன்னார்வலர்களை காவல்துறை எப்படி அனுமதிக்கிறது என்பதுதான் பொதுமக்களின் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

ஒரே ஒரு தவறான சமிக்ஞை ஒரு மிகப்பெரிய விபத்தைத் தோற்றுவிக்கும் என்பது கண்கூடான உண்மை. ஆதலால் இந்த சாலைப் பணிகள் முடியும் வரைக்குமாவது காவல்துறையினர் தலைக்கவச வேட்டையை விட்டுவிட்டு போக்குவரத்து பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் வேண்டுகோளாய் இருக்கிறது. காவல்துறை கவனிக்குமா ?

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top