இந்திய கேப்டன் விராட் கோலி சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது (136 ரன்கள்) அவர் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முன்னேறுவதற்கு வழி வகுத்துள்ளது.
இதனால் கோலி (928 புள்ளிகள்) 25 புள்ளிகள் முன்னேறி 2வது இடத்தினை தக்க வைத்து உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (931 புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளார்.
இந்த தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் 700 புள்ளிகளுடன் 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் இந்தூரில் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அடித்த இரட்டை சதம் அவர் தரவரிசையில் ஓரிடம் முன்னேற வழிவகுத்தது.
இந்த பட்டியலில், சேத்தேஷ்வர் புஜாரா (791 புள்ளிகள்) மற்றும் ரஹானே (759 புள்ளிகள்) ஆகியோர் முறையே 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ளனர். இதனால் ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் 4 பேர் டாப் 10ல் உள்ளனர்.
0 Comments