ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த 5 வீரர்களின் ஒப்பந்தம் முறியடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களின் பட்டியலை சிஎஸ்கே அணி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், இங்கிலாந்து அணியின் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, இந்தியாவின் மோகித் சர்மா, துருவ் ஷோரே, பிஷ்னோய் ஆகிய 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வீரர்கள் விடுவிக்கப்பட்டதன் மூலம் தற்போது தங்கள் அணியில் மொத்தம் ரூ.14.6 கோடி கையிருப்பில் உள்ளதாகவும் சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.. 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments