வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா ஈடர்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் டாஸை வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஆனால், இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 106 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷாந்த் ஷர்மா 5, உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வங்கதேச அணியில் அதிகபட்சமாக இஸ்லாம் 29, லிண்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. புஜாரா 55 ரன்களிலும். மயங்க அகர்வால் 14 ரங்களிலும், ரோஹித் சர்மா 21 ரங்களிலும் ஆட்டமிழந்தனர். கோலி 59, ரஹானே 23 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
0 Comments