ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை பூஜா தாண்டா வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார் .
பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சார்பாக பூஜா தாண்டா பங்கேற்றார். இதில் பூஜா தாண்டா முதல் சுற்றில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கிரோசாசேவாவையும் , இரண்டாவது சுற்றில் நைஜிரிய நாட்டைச் சேர்ந்த ஒடுனாயாவையும் வீழ்த்தினார்.
காலிறுதிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த ராங் நிங்நிங்விடம் பூஜா தாண்டா தோல்வியடைந்தார். இந்நிலையில் ராங் நிங்நிங் ஃபைனலுக்கு முன்னேறியதையடுத்து பூஜா தாண்டா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் 'ரெபிசேஜ்' அடிப்படையில் வாய்ப்பு பெற்றார்.
தொடர்ந்து நடந்த ரெபிசேஜ் சுற்றின் இரண்டாவது சுற்றில் அஜர்பெய்ஜானின் அல்யோனாவை பூஜா தாண்டா 3-8 புள்ளிகளில் வீழ்த்தினார்.
பின்பு வெண்கலப்பதத்துக்கான போட்டியில், நார்வேயின் கிரேஸ் புல்டனை எதிர்கொண்ட பூஜா தாண்டா துவக்கம் முதலே மிகச்சிறப்பாக ஆடி 10-7 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
0 Comments