தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக விளங்குபவர் தலைவாசல் விஜய். இவரின் மகள் ஜெயவீணா, தமிழக அளவில் நிறைய நீச்சல் போட்டிகளில் கலந்துக் கொண்டு பதக்கங்களை ஏற்கெனவே குவித்த நிலையில், தற்போது 50மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் கலந்து கொண்டு இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் ஜெயவீணாவின் சாதனைக்காக, இதுபோன்று பல பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும். சிறு வயதில் இருந்தே நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ள ஜெயவீணா, நேபால் தலைநகரான காட்மண்டுவில் தற்போது நடைப்பெற்று வரும் 13வது தெற்காசிய போட்டியில் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
போட்டியில் பங்குபெற்ற தனது மகளை உற்சாகப்படுத்துவதற்காக நடிகர் தலைவாசல் விஜய்யும் தனது மகளுடன் நேபால் சென்றிருக்கிறார். அப்போது தன் மகள் வெள்ளிப் பதக்கத்தை வென்றவுடன் நெகிழ்ச்சியில் உறைந்து போனார்.
நேபால் தலைநகர் காட்மண்டுவில் நடந்து முடிந்துள்ள 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 174தங்கம், 93 வெள்ளி மற்றும் 45வெண்கலம் என மொத்தம் 312 பதக்கங்கள் வென்று முதல் இடத்தை பெற்றுள்ளது. 51 தங்க பதக்கங்களுடன் மொத்தமாக 206 பதக்கங்களுடன் நேபால் இரண்டாம் இடத்தையும், 40தங்கம் உட்பட மொத்தம் 251 பதக்கங்களுடன் ஶ்ரீலங்கா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
0 Comments