2013 முதல் 2018ஆம் ஆண்டு வரை ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு வருடமும் அதிகபட்ச ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமை ரோஹித் ஷர்மாவையே சேரும்.
இந்த வருடம் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா என்ற சந்தேகம் அதிகமாக இருந்தது. காரணம் வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆரம்பிக்கும் வரையில், ஒரு ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இந்திய வீரராக 143 ரன்களுடன் ஷிகர் தவான் இருந்தார். 3 ஒரு நாள் போட்டிகளில் ஏதாவது ஒரு ஆட்டத்தில் 143 ரன்களுக்கு மேலாக எடுக்கவில்லை என்றால், ரோஹித்தின் ஐந்து வருட தொடர் சாதனையை இழக்க வேண்டிய சூழல் இருந்தது. முதல் ஒரு நாள் போட்டியில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ரோஹித் வெளியேறியது மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அதேபோல இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும், அரை சதத்தைக் கடந்த நிலையில் 27ஆவது ஓவரின் போது ரோஹித் ஷர்மா அடித்த பந்து ஹெட்மயரை நோக்கிச் சென்றபோது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்து போல் உணர்ந்தார்கள் . ஆனால், ஹெட்மயர் அந்த கேட்சை தவறவிட்டதன் பிறகு, ரோஹித்தை யாராலும் நிறுத்தமுடியவில்லை. இந்திய அணிக்கு 159 ரன்கள் சேர்த்துக்கொடுத்து, தனது சாதனையையும் தக்கவைத்துக்கொண்டார் ரோஹித் ஷர்மா. மேலும், 2019 வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் இவர் இந்த மேட்ச் மூலம் பெற்றுள்ளார்.
0 Comments