நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் பகலிரவு போட்டியில் 48.5 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை மிக எளிதாக தோற்கடித்து முதல் ஆட்டத்தை கைப்பற்றியது. இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்தியா நிர்ணயித்த 287 ரன்கள் என்ற இலக்கை எட்டியது வெஸ்ட் இண்டீஸ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷிம்ரான் ஹெட்மையர், ஷாய் ஆகியோர் அபாரமாக சதம் அடித்தனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 -0 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீஸ் முன்னிலை வகித்து வருகிறது.
0 Comments