தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

in News / Weather

தமிழகத்தில் தாமதமாகத் தொடங்கினாலும் வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டை விட இந்த வருடம் தமிழகத்தின் நீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்தது. தென் தமிழகத்தில் அதிகப்படியான மழை பெய்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏரிகளும், அணைகளும் நிரம்பத் தொடங்கின.சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது இன்னும் மழை பெய்து கொண்டே தான் இருக்கிறது. சிறிது, சிறிதாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் சூழ்நிலையில் மீண்டும் மூன்று தினங்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும், 14 ஆம் தேதி கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். சிற்சில இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top